தமிழ்நாடு

"தேர்தல் வரும்போது தான் கூட்டணியும், தலைமையும் முடிவாகும்" - முதல்வர் பழனிசாமி

"தேர்தல் வரும்போது தான் கூட்டணியும், தலைமையும் முடிவாகும்" - முதல்வர் பழனிசாமி

jagadeesh

தேர்தல் வரும்போதும் தான் கூட்டணியும், தலைமையும் முடிவாகும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமியிடம் "பாஜக தலைமையில் கூட்டணி என சொல்லப்படுகிறதே ?" என்ற கேள்வியை எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் "தேர்தல் வரட்டும், கூட்டணியில் யார் என்பதே இன்னும் முடிவாகவில்லை. தேர்தல் வரும்போதும் தான் கூட்டணியும், தலைமையும் முடிவாகும்" என்றார்.

நீட் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த பழனிசாமி "நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென்று ஜூலை மாதமே பிரதமருக்கு கடிதம் எழுதி இருக்கிறேன். கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்" என கூறினார்.

அண்மையில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன்,  "வரும் சட்டப்பேரவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக தலைமையில்தான் கூட்டணி" என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.