கீரம்பூர் அரசு உயர்நிலைப் பள்ளி
கீரம்பூர் அரசு உயர்நிலைப் பள்ளி pt desk
தமிழ்நாடு

நாமக்கல்: “புகாரளிக்க வந்த மாணவிகளுக்கு சாதிய துன்புறுத்தல் கொடுத்தேனா?” தலைமையாசிரியர் விளக்கம்

webteam

நாமக்கல் மாவட்டம் கீரம்பூரில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 115 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில் பயிலும் மாணவிகளை, பள்ளியின் சமூக அறிவியல் ஆசிரியர் பன்னீர்செல்வம் என்பவர் தனது செல்போனில் ஆபாசமாக வீடியோ எடுத்ததாகக் கூறி பரமத்தி போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியர் பன்னீர்செல்வம் கைது செய்யப்பட்டார். மேலும் அவரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் ரவி உத்தரவிட்டுள்ளார்.

கீரம்பூர் அரசு உயர்நிலைப் பள்ளி

இந்நிலையில், ஆசிரியர் பன்னீர்செல்வம் தங்களை செல்போனில் வீடியோ எடுத்ததாக மாணவிகள், பள்ளியின் தலைமையாசிரியர் சர்மிளாவிடம் தெரிவித்ததாகவும் அதற்கு அவர் சாதி ரீதியாக மாணவிகளை ஒருமையில் பேசியதாகவும் கூறி நேற்று மீண்டும் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு அங்கிருந்த போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து, பள்ளியின் தலைமையாசிரியர் சர்மிளா, தான் ஒருபோதும் சாதி ரீதியாக பேசவில்லை என தெரிவித்து அனைவரிடமும் மன்னிப்பு கேட்டார். இருந்த போதிலும் சிலர் தலைமையாசிரியர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

கீரம்பூர் அரசு உயர்நிலைப் பள்ளி

இதனையடுத்து, பரமத்திவேலூர் டிஸ்பி கலையரசன், பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில், பள்ளியின் தலைமையாசிரியர் சர்மிளா முன்னிலையில் மாணவ மாணவியரின் பெற்றோர்கள் தங்களின் குறைகளை கூறினர். இதனையடுத்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் பெற்றோர்களிடம் கோரிக்கைகளை மனுவாக பெற்று கொண்டனர். அதன் பிறகு பெற்றோர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.