தமிழ்நாடு

ரூ.2க்கு இட்லி, ரூ.3க்கு தோசை! போட்டி போட்டு விற்கும் ஹோட்டல்கள்.. இப்படியொரு கிராமம்!

webteam

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே புனவாசல் கிராமத்தில் தற்போதைய கடும் விலைவாசி உயர்விலும் ரூ 2க்கு இட்லியும், ரூ3க்கு தோசையும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதிலும் யார் குறைந்த விலைக்கு விற்பது என தோசை கடையினருக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. அந்தளவுக்கு பல கடைகள் குறைந்த விலைக்கு இட்லி, தோசை விற்பனை செய்கின்றன.

கமுதி அருகே கோவிலாங்குளம் கிராமத்தில் ரூ.4-க்கு ஊத்தப்பம் ரூ.5-க்கு பெரிய அளவிற்கு தோசையை சாம்பார், தக்காளி, தேங்காய் இரண்டு சட்னிகளுடன் விற்கபடுகிறது. மதுரை, சென்னை, திருச்சி, கோவை, வெளியூர் உள்ளிட்ட பல்வேறு நகங்களில் ஒரு இட்லி ரூ12க்கும், ஒரு தோசை ரூ 40க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில் புனவாசல், கோவிலாங்குளம் கிராமத்தில் மிக குறைந்த விலையில் இட்லி, தோசை விற்பனை செய்யபடுவது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய நிலையில் விலைவாசி கடுமையாக ஏற்றம் அடைந்தாலும்குட, இப்படி குறைந்த விலையில் இட்லி தோசை விற்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதன் பின்னணியில் கிராமத்தில் விவசாயிகள், கூலி தொழிலாளிகள் பாதிக்க கூடும் என்ற நோக்கில் லாபமின்றி சேவை அடிப்படையில் இவற்றை செய்வதாக ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதிலும் யார் குறைந்த விலைக்கு இட்லி, தோசை விற்பது என தோசை கடையினர் தங்களுக்கு இடையே போட்டி போட்டு வருகின்றனர். இது மக்களுக்கு இன்னும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.