முழு ஊரடங்கான ஞாயிற்றுக்கிழமையில் இறைச்சி கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூட வேண்டும் என வணிகர் சங்க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் நாமக்கல் ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் வணிகர் சங்க நிர்வாகிகள், கோழிப் பண்ணையாளர்கள், நகைக்கடை உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் என அனைவரும் முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும், மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் மாத்திரைகளை வழங்க கூடாது, தொழிற்சாலைகள் அரசின் விதிகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் போன்றவற்றை கடைபிடிக்குமாறு ஆட்சியர் உத்தரவிட்டார்.