தமிழகத்தில் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை இரவு 10 மணி வரை நீட்டித்தது தமிழக அரசு
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. அத்தியாவசிய கடைகள் மட்டும் குறிப்பிட்ட நேரத்தில் திறக்கப்பட்டன. பின்னர் ஊரடங்கு மெல்ல மெல்ல தளர்வு செய்யப்பட்டு எல்லாக் கடைகளையும் திறக்க அரசு அனுமதி அளித்தது. அதேபோல் கடை திறக்கும் நேரமும் நீட்டிக்கப்பட்டன.
தற்போது 9 மணி வரை மணி வரை மட்டுமே கடைகள் திறக்கப்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது நேரம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. நாளை முதல் தமிழகத்தில் கடைகள் திறந்திருக்கும் நேரத்தை இரவு 10 மணி வரை நீட்டித்தது தமிழக அரசு. பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு நேர நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது