தமிழ்நாடு

அனைத்துக்கட்சி கூட்டம் ஏன்? - முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்

கலிலுல்லா

நீட் தேர்வு தொடர்பான தீர்மானத்தை குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் ஆளுநர் வைத்திருக்கிறார் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் அனைத்துக்கட்சிகூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கூட்டத்தில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின் ''திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் இந்திய பிரதமரை 17.06.2021 அன்று நேரில் சந்தித்து நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். நம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் தான் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்கும் சட்ட முன்வடிவை நமது சட்டமன்றத்தில் நிறைவேற்றினோம்.

அப்படி நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவை, குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பிவைத்தோம். ஆனால், அதை குடியரசுத்தலைவருக்கு அனுப்பாமல் வைத்திருக்கிறார் ஆளுநர். இது தொடர்பாக ஆளுநரை நேரில் சந்தித்து வலியுறுத்தினேன். இருப்பினும் அவர் குடியரசுத்தலைவருக்கு அனுப்பவில்லை. ஆகவே, வரைவுத்தீர்மானம் மீது உங்களின் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.