சரத்குமார் - விஜய்
சரத்குமார் - விஜய்  PT WEB
தமிழ்நாடு

“மற்ற அரசியல் கட்சி தலைவர்களை விட அதிகமாக உழைத்தவன்; நான் செய்த சேவைகளும், சாதனைகளும்..”-சரத்குமார்!

webteam

அகில இந்தியச் சமத்துவ மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், மற்றும் நாடாளுமன்ற , சட்டமன்ற பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "ஆலோசனைக் கூட்டத்தில் எனக்கு முழு அதிகாரத்தைத் தந்துள்ளனர். அதிகாரத்தைப் பயன்படுத்தி நல்ல முடிவை விரைவில் எடுப்பேன். விஜய் கட்சியைத் தொடங்கியதற்கு வாழ்த்துகள். விஜய்க்கு நான் அறிவுரை வழங்க முடியாது. அதற்காக நான் அரசியலுக்கு வரவில்லை.

மக்கள் வெற்றி கழக தலைவர் விஜய்

பாராளுமன்ற தேர்தல் சமத்துவ மக்கள் கட்சியின் இலக்கு இல்லை. 2026 சட்டமன்ற தேர்தல் தான் சமத்துவ மக்கள் கட்சியின் இலக்கு.திமுகவிலிருந்து கூட்டணி குறித்து எந்த அழைப்பும் வரவில்லை. வெளிநாட்டிலிருந்த காரணத்தால் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய முடியவில்லை.விரைவில் மழை வெள்ள நிவாரணம் வழங்குவோம்.

விஜய் குறிப்பிட்ட அறிக்கையில் கூறியது போலத் தமிழ்நாட்டில் ஊழல் நிறைந்த ஆட்சி தான் உள்ளது. ஆனால் இந்தியாவில் மதத்தினை வைத்து அரசியல் இல்லை. எனக்கு முதல்வர் ஆக வேண்டும் என்று எண்ணம் இல்லை. விரைவில் அமர வேண்டிய இடத்தில் அமருவேன். சாதி,மத வேறுபாடின்றி கட்சியில் வாய்ப்பு வழங்குவேன். கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த 15 நாட்களில் வரும்.

மக்கள் சமத்துவ கட்சித் தலைவர் சரத்குமார்

மூன்று ஆண்டுக் கால திமுக ஆட்சியில் அமைச்சர்கள் சிறைக்குச் சென்றது தான் திமுகவின் செயல்பாடு. சரத்குமார் செய்யும் சாதனைகளும், சேவைகளும் ஊடகங்களுக்குத் தெரியாது. யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அரசு யோசிக்கும் திட்டங்களை அரசுக்கு முன்னே நான் செய்துள்ளேன்

மற்ற அரசியல் கட்சித் தலைவர்களை விட அதிகமாக உழைத்தவன் சரத்குமார். கலைஞர் ஆட்சியிலிருந்த போது அவரிடம் கேட்டிருந்தால் 25 தொகுதிகளை என்னிடம் கொடுத்து இருப்பார். சரத்குமார் உண்மையான மக்களின் தலைவர் என்பதை மக்கள் விரைவில் புரிந்து கொள்வார்கள்.

பிரதமர் மோடி

மோடியைப் புகழ்வதற்குப் பல காரணங்கள் உள்ளது. வெளிநாடுகளில் மோடியின் செயல்பாடுகளால் இந்தியாவின் நிலை உயர்ந்துள்ளது. இந்தியா பொருளாதாரம் உயர்ந்துள்ளதற்குக் காரணம் மோடி மட்டுமே. எல்லா இடங்களிலும் இந்தியாவின் பெயர் உயர்ந்ததற்குக் காரணம் பிரதமர் மோடி மட்டுமே.

இந்தியா கூட்டணி கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து கொண்டே வருகிறது. இந்தியா கூட்டணி உறுதியான கூட்டணி இல்லை" என்றார்.