தமிழ்நாடு

ஏர்செல் மேக்சிஸ் வழக்கிலிருந்து மாறன் சகோதர்கள் விடுவிப்பு

webteam

ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கிலிருந்து குற்றம்சாட்டப்பட்ட மாறன் சகோதரர்கள் உள்பட அனைவரையும் விடுவித்து டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏர்செல் நிறுவன பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்க அந்த நிறுவனத்தின் உரிமையாளர் சிவசங்கரனை முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், கலாநிதிமாறன் உள்ளிட்டவர்கள் வற்புறுத்தியதகாக் கூறி அவர்கள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணை டெல்லி சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி முன்னிலையில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் சிபிஐ குற்றச்சாட்டுகளில் எந்தவித முகாந்திரமும் இல்லை என்று கூறி குற்றம்சாட்டப்பட்ட தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். டெல்லி சிபிஐ நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து சிபிஐ தரப்பில் மேல்முறையீடு செய்ய இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.