தமிழ்நாடு

'ஏலேலோ ஐலசா' பழுதாகி நின்ற அரசுப் பேருந்து - பத்திரமாக தள்ளி நிறுத்திய பயணிகள்

'ஏலேலோ ஐலசா' பழுதாகி நின்ற அரசுப் பேருந்து - பத்திரமாக தள்ளி நிறுத்திய பயணிகள்

kaleelrahman

ராசிபுரம் போக்குவரத்து மிகுந்த சாலையில் அரசு பேருந்து பழுதாகி நின்ற நிலையில், ஓட்டுநர் செய்வதறியாது திகைத்து நின்றார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பழைய பேருந்து நிலைய பிரதான சாலையில், தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் கூட்டத்தால் வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் சேலத்திலிருந்து ராசிபுரம் நோக்கி வந்து கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென பழைய பேருந்து நிலையத்தில் பழுதாகி நின்றது.

இதனால் செய்வதறியாது திகைத்த ஓட்டுனர், பயணிகள் மற்றும் பொதுமக்கள் உதவியோடு பேருந்தை தள்ளி ஓரமாக நிறுத்தினார். அரசுப் பேருந்து பழுதாகி நின்றதால் அரைமணி நேரம் போக்கு பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் அரசு பேருந்தை நீண்ட நேரத்திற்குப் பின் பயணிகள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் சரிசெய்து பேருந்து நிலையத்திற்கு கொண்டு சென்றார்.