தமிழகத்தில் உள்ள விமானநிலையங்களில் மதுபானக்கடைகளை திறக்க டாஸ்மாக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு விமான நிலையங்களிலும் மதுபானக்கடைகளைத் திறக்க டாஸ்மாக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. டெல்லி, மும்பை விமான நிலையங்களில் செயல்படும் மதுபானக்கடைகளுக்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளதால் தமிழகத்திலும் அந்த நடைமுறையைக் கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். பயணிகள் வந்திறங்கும் பகுதியில், உயர்தர மதுபானக் கடைகளை திறப்பது குறித்து விமான நிலைய அதிகாரிகளுடன் டாஸ்மாக் நிர்வாகம் ஆலோசனையும் நடத்தியதாக தெரிகிறது.