தமிழ்நாடு

தங்கத்தை மாலைபோல் மாட்டிக் கொண்டு வந்த பெண்

தங்கத்தை மாலைபோல் மாட்டிக் கொண்டு வந்த பெண்

webteam

அட்சய திருதியை நாளான இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நகைக் கடைகளை நோக்கி மக்கள் குவிந்தவண்ணம் உள்ளனர். 

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் செல்வம் சேரும் என்ற நம்பிக்கை மக்களிடம் நிலவுகிறது. அதன்படி, சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் காலை 6 மணி முதலே நகைக் கடைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. கோவை ராஜவீதி, கிராஸ்கட் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள‌ நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அதேபோல், சென்னை தியாகராஜ நகரில் காலை முதலே மக்கள் நகைகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அட்சய திருதியை நாளை முன்னிட்டு வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் நகைக் கடைகள் சிறப்பு சலுகைகளை வழங்கியுள்ளன. மக்கள் கூட்டம்‌ அதிகமாக இருப்பதால் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அட்சய திருதியை நாளை முன்னிட்டு கோவையிலும் நகைகளை வாங்க மக்கள் ஆர்வம்காட்டி வருகின்றனர். கோவை நகைக்கடைக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் கழுத்து நிறைய அணிந்திருந்த நகைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தங்கத்தை அவர் மாலைபோல் கோர்த்து மாட்டியிருந்தார். அந்தத் தங்கம் போதாது என்று அவர் மீண்டும் தங்க வாங்க வந்தது ஆச்சர்யத்தை கிளப்பியது. அட்சய திருதியை நாளில் நகைகள் வாங்கினால் செல்வம் சேரும் என்பதால் இந்தநாளில் நகை வாங்க வந்ததாக கூறினார்.