ajith kumar custodial death news update PT web
தமிழ்நாடு

மடப்புரம் அஜித் குமார் கொலை வழக்கில் புதிய திருப்பம்.. சிபிஐ விசாரணையில் திடுக்கிடும் தகவல்

விசாரணையின் போது அஜித்குமாரை அழைத்துச் சென்ற டெம்போ வாகனத்தின் வாகன பதிவின் இரு வேறு விதமாக இருப்பதால் சிபிஐ கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

PT WEB

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நகை திருட்டு புகார் தொடர்பாக, தனிப்படை போலீஸார் தாக்கியதில் கோவில் காவலாளியான மடப்புரத்தைச் சேர்ந்த அஜித்குமார், கடந்த ஜூன் 28-ஆம் தேதி உயிரிழந்தார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின் பேரில், வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டது. சிபிஐ அதிகாரிகள் விசாரணையை உடனடியாக தொடங்கி, ஆகஸ்ட் 20-க்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கடந்த ஜூலை 1 முதல் 7ஆம் தேதி வரை தமிழக போலீசாரால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து விசாரணை ஆவணங்களும், வீடியோ ஆதாரங்களும், மருத்துவப் பரிசோதனை அறிக்கைகளும், சிபிஐ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

திருப்புவனம் அஜித் குமார்

இந்த வழக்கு சிபிஐ கைக்கு மாற்றப்பட்டுள்ளதால், பல முக்கிய முடிச்சுகள் அவிழ்க்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதில் முக்கியமாக, திருப்புவனம் காவல் நிலையத்தில் விசாரணை செய்யாமல் சிறப்பு தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டது ஏன்? சீருடை இல்லாமல் 30 கிமீ தூரத்திலிருந்து போலீசார் ஏன் வந்தனர்? யார் அழுத்தத்தில் இது நடந்தது? போன்ற கேள்விகள் சிபிஐ விசாரணையில் பதில்கள் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிபிஐ அதிகாரிகள் கொல்லப்பட்ட அஜித் குமார் குடும்பத்தினரிடம் மற்றும் பல்வேறு இடங்களில் தங்களது விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், அஜித் குமார் கொலை வழக்கு புதிய திருப்பம் நிகழ்ந்துள்ளது.

அஜித்குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்று காவல்துறை வாகனத்தின் பதிவெண் குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், 2 வாகன பதிவெண்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. TN 01G 0491 என்ற வாகன பதிவெண்ணை TN63 G 0491 என்ற பதிவெண் ஸ்டிக்கரை ஒட்டி போலியான பதிவெண்ணுடன் பயன்படுத்தப்பட்டுள்ளது. சிபிஐ அதிகாரிகள் விசாரணையில் 2 வாகன பதிவு எண்கள் முரண்பாடாக இருக்கும் நிலையில் சிபிஐ அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மடப்புரம் அஜித் குமார் திருட்டு வழக்கின் போது விசாரணைக்காக அழைத்துச் சென்ற டெம்போ வாகனத்தில் சரக்கு பாட்டில்கள், சீட்டு கட்டுகளை சிபிஐ அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

அஜித் குமார் கொலை வழக்கில் கோவில் பின்புறத்தில் இருந்து அடித்து அஜித் குமாரை அழைத்துச் சென்ற ஆட்டோவை வரவழைக்கப்பட்டு அந்த பகுதியில் இருந்து அஜித்குமாரை ஏற்றிய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது குறித்து ஆட்டோ ஓட்டுநர் அய்யனாரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..