முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், தமது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா செய்த வைத்திலிங்கம், முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வைத்திலிங்கம், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் தமது எம்எல்ஏ பதவியை திடீரென ராஜினாமா செய்த வைத்திலிங்கம், சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து, தமது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த வைத்திலிங்கம், முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான வைத்திலிங்கம், சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தந்தார். அவரை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, தலைமை நிலைய செயலர் பூச்சி முருகன் ஆகியோர் வரவேற்றனர்.
பின்னர் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்துப் பேசிய அவர், திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அதிமுகவில் இருந்து விலகினாலும், தாய் கழகமான திமுகவில் இணைந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவில் இருந்து தனக்கு அழைப்பு வந்ததாகவும், அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே இணைவதாக, தான் தெரிவித்துவிட்டதாகவும் குறிப்பிட்டார். மேலும் தேர்தல் நெருங்குவதாலும், ஓ.பன்னீர்செல்வம் முடிவெடுக்க தாமதமானதாலேயுமே திமுகவில் இணைந்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.