தமிழ்நாடு

'கூவத்தூரில் எங்களுக்கு தினகரன்தான் ஊத்திக் கொடுத்தார்' - அமைச்சர் சி.வி.சண்முகம் காட்டம்

'கூவத்தூரில் எங்களுக்கு தினகரன்தான் ஊத்திக் கொடுத்தார்' - அமைச்சர் சி.வி.சண்முகம் காட்டம்

JustinDurai

“டிடிவி தினகரன்தான் எனக்கு 'ஊத்திக்' கொடுத்தார். அவரோட தொழிலே 'ஊத்திக்' கொடுப்பதுதான். ஊத்திக் கொடுத்தே குடியை கெடுத்தவர்கள் அவர்கள்” என்று அமைச்சர் சிவி சண்முகம் காட்டமாக தெரிவித்தார்.

தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று விழுப்புரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

''அதிமுகவை கைப்பற்றுவது இருக்கட்டும். முதலில் சசிகலாவுக்கு நான் எச்சரிக்கை விடுகிறேன். டி.டி.வி. தினகரன் குடும்பத்தில் இருந்து சசிகலா தன்னை காப்பாற்றி கொள்ளவேண்டும். டிடிவி தினகரனை நம்பித்தான் சசிகலா கட்சியையும் ஆட்சியையும் ஒப்படைத்து விட்டுச் சென்றார். ஆனால் அவர் ஒரே மாதத்தில் அதை உடைத்துவிட்டார். நான் நிதானமாக பேசுகிறேனா என்று டிடிவி தினகரன் கேட்கிறார். ஆமாம் இவர்தான் எனக்கு 'ஊத்திக்' கொடுத்தார். அவரோட தொழிலே 'ஊத்திக்' கொடுப்பதுதான். ஊத்திக் கொடுத்தே குடியை கெடுத்தவர்கள் அவர்கள்.

கூவத்தூரில் எங்களுக்கு அவர்தான் ஊத்திக் கொடுத்தார். இல்லை என்று அவரை சொல்லச் சொல்லுங்கள். இனி ஒருபோதும் தினகரனையும், சசிகலாவையும் அதிமுகவில் சேர்க்க முடியாது. அ.தி.மு.க. என்பது ஒன்றரை கோடி தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம். இனி ஒருபோதும் சசிகலாவின் குடும்பத்தின் பிடியில் சிக்காது'' என்றார்.