தமிழ்நாடு

மக்களோடு மக்களாக எப்போதுமே களத்தில் நிற்பது அதிமுகதான் - விஜயபாஸ்கர்

மக்களோடு மக்களாக எப்போதுமே களத்தில் நிற்பது அதிமுகதான் - விஜயபாஸ்கர்

kaleelrahman

பேரிடர் காலத்திலும் சரி பெருந்தொற்று காலத்திலும் சரி மக்களோடு மக்களாக களத்தில் நின்று பயணிக்கும் ஒரே கட்சி அதிமுகதான் என்று புதுக்கோட்டையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசினார்.

புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட அம்பாள்புரம், மச்சுவாடி, மாப்பிள்ளையார் குளம் உள்ளிட்ட பகுதிகளில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சார்பில், இரண்டாம் கட்ட கொரோனோ நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 


அம்பாள்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வருகை தந்த அமைச்சருக்கு அப்பகுதி இளைஞர்கள் ஜல்லிக்கட்டு காளையுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதன்பின் பொதுமக்களுக்கு இரண்டாம் கட்ட கொரோனா நிவாரண பொருட்களை வழங்கிய அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில்...

கஜா புயல் போன்ற பேரிடர் காலத்திலும் கொரோனோ போன்ற பெருந்தொற்று காலத்திலும் மக்களோடு மக்களாக களத்தில் நின்று உதவிகளை செய்து வரும் ஒரே அரசு அதிமுக தான். அதேபோல் அதிமுகவினர்தான் தொடர்ந்து மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்கள். 


புதுக்கோட்டை மண்ணை ஒருபோதும் தாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று கூறியதோடு மக்களுக்காக களத்தில் நின்று பாடுபடுவோம் என்றும் அவர் கூறினார். தொடர்ந்து அவர் பேசுகையில், அதிமுக ஆட்சியில்தான் ஏற்கெனவே புதுக்கோட்டையில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது புதிதாக அரசு பல் மருத்துவ கல்லூரி அமைக்க ஒப்புதல் பெறப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.

அதேபோல புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு காவிரி குடிநீரை வழங்கியதும் இந்த அதிமுக அரசு தான் என்றும் அடுத்த கட்டமாக காவிரி குண்டாறு இணைப்பு திட்டம் மூலம் காவிரி ஆறை புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கொண்டு வந்து வறண்ட பகுதியான இம்மாவட்டத்தை பசுமையான பகுதியாக மாற்ற உள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.