அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டததை கண்டித்து, திருவாரூர் ரயில் நிலையம் அருகே திருவாரூர் மாவட்ட கழக செயலாளர் காமராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. போராட்டத்தின்போது, அதிமுக தொண்டர்கள் மீது பொய் வழக்குகள் போட்டு இருக்கிறார்கள் என்றும் திமுக அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்தப் போராட்டத்தை திருவாரூர் அதிமுக மாவட்ட கழக செயலாளர் மற்றும் நன்னிலம் சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் தலைமையேற்று நடத்தியிருந்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்களும் திருவாரூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளும் திரளாக கலந்துகொண்டார்கள்.
போராட்டத்தின்போது `போடாதே போடாதே, பொய்வழக்கு போடாதே. வளைக்காதே வளைக்காதே சட்டத்தை வளைக்காதே’ என அங்கு வந்திருந்த அதிமுக தொண்டர்கள் கோஷமிட்டனர்.
சமீபத்திய செய்தி: 'உயிருக்கு குறி வைத்தார்கள்" ரஷ்யாவின் சதித்திட்டத்தை உடைத்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி