தமிழகத்தில் ஆட்சியமைக்குமாறு எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ள நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளரான எம்பி மைத்ரேயன் தேர்தல் ஆணைய அதிகாரிகளை இன்று சந்திக்க இருக்கிறார்.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அக்கட்சியின் பொதுக்குழு கூட்டப்பட்டு புதிய பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், சசிகலா தற்காலிக பொதுச்செயலாளர்தான் என்றும், அவ்வாறு தற்காலிகப் பொதுச்செயலாளரைத் தேர்வு செய்ய அதிமுகவின் கட்சி விதிகளில் இடமில்லை என்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வாதிடப்பட்டது.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு அதிமுகவின் அவைத்தலைவராக இருந்து ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்த மதுசூதனன் கடிதம் எழுதியிருந்ததாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன், தேர்தல் ஆணைய அதிகாரிகளை டெல்லியில் இன்று மதியம் 2.45 மணிக்கு சந்திக்க இருக்கிறார்.