தமிழ்நாடு

’நாளை இதுதான் நடக்கும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை’ - இபிஎஸ் தரப்பு அதிரடி

JustinDurai

''பொதுக்குழுவில் இதுதான் நடக்கும், இது நடக்காது என உத்தரவாதம் தர முடியாது'' எடப்பாடி பழனிசாமி தரப்பு கைவிரித்துள்ளது.

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி கட்சி உறுப்பினர்கள் ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமி, பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் ஆகியோர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மதியம் விசாரணைக்கு வந்தது.

அப்போது வாதாடிய எடப்பாடி பழனிச்சாமி தரப்பு, ''ஒருங்கிணைப்பாளரோ, இணை ஒருங்கிணைப்பாளருக்கோ உச்சபட்ச அதிகாரம் இல்லை. பொதுக்குழுவுக்கு தான் உச்சபட்ச அதிகாரம் உள்ளது. பொதுக்குழுவை இருவரும் இணைந்து கூட்ட முடியும். பொதுக்குழு முடிவுகள் கட்சியினரை கட்டுப்படுத்தும். கொள்கைகளை உருவாக்குவது உள்ளிட்ட அனைத்திற்கும் பொதுக்குழுவிற்கே அதிகாரம் உள்ளது. எந்த விதியையும் சேர்க்கவோ, நீக்கவோ பொதுக்குழுவால் முடியும். அதற்கு மட்டுமே அதிகாரம்  உள்ளது. இது நடக்கும் இது நடக்காது என உத்தரவதமாக சொல்லமுடியாது. உச்சபட்ச அதிகாரம் உடைய பொதுக்குழு எந்த முடிவையும் எடுக்கலாம்.

நாளை திருத்தம் நடக்கலாம். நடக்காமலும் இருக்கலாம். பொதுக்குழுவில் தான் உறுப்பினர்களின் விருப்பம்  அறிவிக்கப்படும். பொதுக்குழுவில் பெரும்பான்மையான கருத்துக்கு மதிப்பளிப்பதே ஜனநாயகம் ஆகும். அஜண்டா இல்லாமல் தான் ஏற்கனவே பொதுக்குழுக்கள் நடத்தப்பட்டுள்ளது. எனவே பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கூடாது. இந்த மனுவே விசாரணைக்கு உகந்ததல்ல. பொதுக்குழுவின் முடிவுகளை காக்கின்ற அறங்காவலர்களாகத்தான் பிற நிர்வாகிகள் செயல்பட முடியும். சட்டவிதிகளுக்கு உட்பட்டுதான் பொதுக்குழு கூட்டப்படுகிறது'' என இபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது. 

அப்போது ஓபிஎஸ் தரப்பினர் வாதிடுகையில், ''எந்த உறுப்பினரும் பொதுக்குழு கூட்டத்தில் குரல் எழுப்பலாம் என்பதற்கான விதிகளை காட்டுங்கள் பார்ப்போம் என எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடம் கேள்வி எழுப்பினர்.

பொதுக்குழு கூட்டத்திற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவுபடி பாஸ்கள் வழங்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் உறுப்பினர்கள் வரத்தொடங்கி உள்ளனர்.

<iframe src="https://www.facebook.com/plugins/video.php?height=314&href=https%3A%2F%2Fwww.facebook.com%2FPutiyaTalaimuraimagazine%2Fvideos%2F2853734414932337%2F&show_text=false&width=560&t=0" width="560" height="314" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowfullscreen="true" allow="autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share" allowFullScreen="true"></iframe>

இதையும் படிக்கலாம்: 'தலைமையை மாற்றுவது தொடர்பான திருத்தம் கூடாது' - நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு காரசார வாதம்