தமிழ்நாடு

அதிமுக பிரமுகர் சுயேட்சையாக களமிறங்கியதால் வெற்றி வாய்ப்பை இழந்த அதிமுக வேட்பாளர்

sharpana

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக பிரமுகர் சுயேச்சையாக களம் இறங்கியதால் அதிமுக வேட்பாளர் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

சேந்தமங்கலம் தொகுதியில் திமுக சார்பில் நான்காவது முறையாக பொன்னுசாமியும், அதிமுக சார்பில எஸ்.சந்திரனும் போட்டியிட்டனர். இந்நிலையில், தற்போதைய எம்எல்ஏவாக உள்ள சந்திரசேகரன் தனக்கு அதிமுகவில் சீட் வழங்கப்படாததால் அதிருப்தி அடைந்து சேந்தமங்கலம் தொகுதியில் சுயேச்சையாக களமிறங்கினார்.

தேர்தலில் திமுக வேட்பாளர் பொன்னுசாமி சுமார் 90 ஆயிரம் வாக்குகள் பெற்ற நிலையில், அதிமுக வேட்பாளர் சந்திரன் 80 ஆயிரம் வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். சுயேச்சையாக களமிறங்கிய சந்திரசேகரன் 11 ஆயிரத்து 371 வாக்குகள் பெற்றதால், அதிமுக வேட்பாளரின் வெற்றி வாய்ப்பு பறிபோனதாக கூறப்படுகிறது.

நீண்ட ஆண்டுகளாக அதிமுகவின் கோட்டையாக இருந்து வந்த சேந்தமங்கலம் இம்முறை திமுக வசம் சென்றதால், அதிமுகவினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.