தமிழ்நாடு

பொதுச் செயலாளர் பதவிக்கு விரைவில் தேர்தல்: மதுசூதனன்

பொதுச் செயலாளர் பதவிக்கு விரைவில் தேர்தல்: மதுசூதனன்

Rasus

அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்படும் என மதுசூதனன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் முதலமைச்சர் பன்னீர்செல்வம் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த மதுசூதனன், எம்ஜிஆர் வகுத்த கட்சி சட்டத் திட்டத்தின்படி அடிமட்ட தொண்டர்கள் தான் பொதுச் செயலாளரை தேர்வு செய்ய முடியும் என்றார். தற்காலிக பொதுச் செயலாளர் என்பது அதிமுக வரலாற்றிலேயே கிடையாது என்றும் அவர் கூறினார்.

கொடிபிடிக்கும் அடிமட்ட தொண்டர்கள் வாக்களிக்கும் பொதுச் செயலாளருக்கான தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் மதுசூதனன் தெரிவித்தார். மேலும், ஜெயலலிதாவால் சேர்த்து வைக்கப்பட்டுள்ள சொத்துக்களை பாதுகாப்பதற்கு, கட்சி சொத்து பாதுகாப்பு குழு விரைவில் அமைக்கப்படும் எனவும் அவர் கூறினார்.