தமிழ்நாடு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.செங்குட்டுவன் காலமானார்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.செங்குட்டுவன் காலமானார்

jagadeesh

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் பா.செங்குட்டுவன், உடல்நலக் குறைவால் காலமானார்.

கடந்த 2014 - 2019 ஆம் ஆண்டு காலகட்டத்தில் வேலூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் அதிமுகவின் வழக்கறிஞர் பா.செங்குட்டுவன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அமமுகவுக்கு சென்றவர் மீண்டும் அதிமுகவில் இணைந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக கட்சிப் பணியில் இருந்து விலகியே இருந்தார். கடந்த சில மாதங்களாக கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர், கடந்த ஒரு வாரமாக வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலமான பா.செங்குட்டுவனின் உடல், காட்பாடி திருநகர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள், கட்சியினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்தும், அதை சட்ட வழியில் அணுகுவது குறித்தும் பா.செங்குட்டுவன் புத்தகம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.