தமிழ்நாடு

எஸ்.பி. வேலுமணி உள்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு

எஸ்.பி. வேலுமணி உள்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு

JustinDurai
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்பட 17 பேர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஊழல் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை குனியமுத்தூரில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த புகாரில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. வேலுமணிக்கு சொந்தமான 52 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 
இந்த நிலையில் எஸ்.பி. வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன் மற்றும் நிறுவனங்கள் உள்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஊழல் வழக்கு பதிந்துள்ளனர். அரசு ஒப்பந்தங்களை தனது உறவினர்கள், நண்பர்களுக்கு வழங்கி முறைகேட்டில் ஈடுபட்ட புகாரிலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் எம்.எல்.ஏ. விடுதியில் உள்ள எஸ்.பி. வேலுமணி அறையிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.