2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் உருவான அதிமுக- தேமுதிக கூட்டணி, 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து மாறுபாடு உருவாகியிருப்பது, கவனிக்கத்தக்க விஷயமாக மாறியிருக்கிறது..,``எடப்பாடி பழனிசாமி அண்ணன் ஓ.கே. சொன்னால் நான் தமிழ்நாடு முழுவதும் சென்று வேலை பார்க்க தயாராக உள்ளேன்’’ என விஜயபிரபாகரன் கூட்டணி தர்மம் குறித்து, பெருமிதமாக பேசிவந்த நிலையில், தற்போது திமுக அரசை தேமுதிக அவைத்தலைவர் இளங்கோவன் பாராட்டியிருப்பது பேசுபொருளாகியுள்ளது..நடப்பது என்ன விரிவாகப் பார்ப்போம்..,
தேமுதிக கொடி அறிமுகப்படுத்தப்பட்ட 25-ம் ஆண்டு விழா, தேமுதிக தலைமை அலுவலகமான, கேப்டன் ஆலயத்தில், கடந்த பிப்ரவரி 12-ம் தேதி நடைபெற்றது..,அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதாவிடம், தமிழ்நாட்டில் காலியாகும் ராஜ்யசபா இடங்கள் குறித்துக் கேள்வியெழுப்ப., `அதிமுகவுடன் கூட்டணி அமைத்தபோதே கையெழுத்திடப்பட்டு, உறுதி செய்யப்பட்டதுதான் ராஜ்யசபா பதவி. ராஜ்யசபா தேர்தலுக்கான நாள் வரும் போது, தேமுதிக சார்பாக யார் ராஜ்யசபா செல்ல உள்ளார்கள் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்” எனப் பதிலளித்திருந்தார்..,இந்தநிலையில், நேற்று, சேலம் மாவட்டம் ஆத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம், தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்படுகிறதா என்ற கேள்வியெழுப்ப,`ராஜ்யசபா சீட் வழங்குவதாக அதிமுக கூறியதா? யார் யாரோ சொல்வதை வைத்து எங்களிடம் கேட்க வேண்டாம்.. தேர்தலில் என்ன வெளியிட்டோமோ அப்படி தான் நடந்து கொள்கிறோம்’’ எனப் பதிலளித்தார்..,தொடர்ந்து, விஜயகாந்தின் அதிகாரபூர்வ எக்ஸ் தளத்தில், 'சத்தியம் வெல்லும் நாளை நமதே' எனப் பதிவிடப்பட்டு, உடனடியாக அது நீக்கப்பட்டது..,இந்தநிலையில், ராஜ்யசபா இடம் குறித்த இ.பி.எஸ்ஸுன் பதில், அதிமுக - தேமுதிக கூட்டணியில் விரிசலை உண்டாக்கியிருக்கிறதா என்கிற கேள்வி எழுந்துள்ளது..,
2019 நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுக உள்ளடக்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து தேர்தலைச் சந்தித்த தேமுதிக, 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக கூட்டணியை விட்டு வெளியேறியது..,டிடிவி தினகரனின் அமமுகவுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்தது,.,தொடந்து, 2024 தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் தனித்தனி அணியாகத் தேர்தலைச் சந்திக்க, தேமுதிக, அதிமுகவுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்தது..,பொதுவாக, தேர்தலுக்குப் பிறகு கூட்டணிக் கட்சிகளுடன் தொடர்ந்து பயணிப்பதை பழக்கமாக வைத்துக்கொள்ளாத தேமுதிகவின் அணுகுமுறையில், இந்தமுறை மாற்றம் தெரிந்தது..,2024 தேர்தலுக்குப் பிறகும், அதிமுகவுடன் நல்லுறவையே பேணி வந்தது...அதிமுக நடத்திய போராட்டங்களில் பிரேமலதா கலந்துகொண்டார்..,`எடப்பாடி பழனிசாமி அண்ணன் ஓ.கே. சொன்னால் நான் தமிழ்நாடு முழுவதும் சென்று வேலை பார்க்க தயாராக உள்ளேன். எனது தந்தை கேப்டன் விஜயகாந்த் குறித்து எனக்கு கூறியுள்ளார். எனவே கூட்டணி தர்மம் கருதி அ.தி.மு.க. கூறினால் தமிழகம் முழுவதும் வேலை பார்க்க நான் தயாராக உள்ளேன்’’ என பாசமழை பொழிந்தார்..,கடந்த நவம்பர் மாதம் நடந்த தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா, `“2026 சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் அதிமுகவுடன்தான் கூட்டணி. நட்புணர்வுடன் அதிமுக - தேமுதிக கூட்டணி தொடர்கிறது’’ எனப் பேசியிருந்தார்..,இந்தநிலையில், ராஜ்யசபா இடம் குறித்து இ.பி.எஸ் தெரிவித்த கருத்து தேமுதிக தலைமையை அதிருப்திக்குள்ளாக்கியிருக்கிறது..,
இதுஒருபுறமிருக்க, தொகுதி மறுவரையறை தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டம் குறித்து தேமுதிக அவைத்தலைவர் இளங்கோவன், ``தமிழ்நாடு அரசு மிகச் சிறப்பான கூட்டத்தைக் கூட்டியுள்ளது..,மாநில அரசின் தீர்மானத்தை தேமுதிக முழுமையாக ஆதரிக்கிறது’’ எனக் கருத்துத் தெரிவித்திருக்கிறார்..,திமுக அரசி மிகக் கடுமையாக விமர்சித்து வந்த தேமுதிக தற்போது பாராட்டியிருப்பதும் கவனிக்கத்தக்க விஷயமாக மாறியிருக்கிறது..,அதேவேளை, அதிமுக மூத்த தலைவர்கள், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன..,அதேபோல, அதிமுகவின் ராஜ்யசபா இடங்களுக்கு அதிமுகவுக்குள்ளே பலத்த போட்டி நிலவுவதோடு, பாமகவும் தங்களுக்கு வேண்டுமென கோரிக்கை வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது