அதிமுக கூட்டணி
அதிமுக கூட்டணி புதிய தலைமுறை
தமிழ்நாடு

பாஜகவுடன் கூட்டணி தொடருமா? என்ன முடிவெடுக்கப்போகிறது அதிமுக? சற்று நேரத்தில் மாவட்ட செயலாளர் கூட்டம்

PT WEB

பாஜக - அதிமுக இடையேயான வார்த்தை மோதல் போக்கு கடந்த சில தினங்களாக வலுவான நிலையில், அதிமுக கூட்டணியில் தற்போதைக்கு பாஜக இல்லை எனவும் அறிவிப்பு வெளியானது. இதையடுத்து, சமீபத்தில் டெல்லி சென்று பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டாவை சந்தித்து பேசிவிட்டு திரும்பியிருந்த அதிமுக தலைவர்கள் குழு, இபிஎஸ்ஸையும் சந்தித்து பேசி இருந்தது.

இந்நிலையில், சென்னையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இன்று மாலை நடைபெறும் இந்த கூட்டத்தில், பாஜகவுடனான கூட்டணி குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி தொடருமா என்பது குறித்து இந்த வீடியோவில் அறிவோம்.