தமிழ்நாடு

அதிமுக தலைமை அலுவலகத்தில் மோதல் - ரத்தக் காயத்துடன் வெளியே வந்த தொண்டர்

அதிமுக தலைமை அலுவலகத்தில் மோதல் - ரத்தக் காயத்துடன் வெளியே வந்த தொண்டர்

JustinDurai

அதிமுகவில் கடந்த செவ்வாய்கிழமை பற்றிய பரபரப்பு, தொடர்ந்து நீடித்து வருகிறது. அதன் உச்சமாக அதிமுக தலைமை அலுவலகத்திலிருந்து தொண்டர் ஒருவர் ரத்த காயத்துடன் வெளியே வந்ததால், அங்கு பதற்றமும் தொற்றிக்கொண்டது.     

அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை முழக்கத்திற்கு இடையே அக்கட்சியின் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்கள் குறித்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் 3-வது கட்டமாக தீர்மானக் குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது அதிமுக அலுவலகம் வந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அவரது ஆதரவாளர்கள் முழக்கங்களை எழுப்பி வரவேற்பு அளித்தனர். "கழகப் பொதுச்செயலாளர் ஓபிஎஸ்" என அவர்கள் முழக்கமிட்டனர்.

பின்னர் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளராக இருக்கும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமது ஆதரவாளர்களின் பலத்த பாதுகாப்போடு அதிமுக அலுவலகத்திற்கு வருகை தந்தார். அப்போது, அங்கு கூடியிருந்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஜெயக்குமாருக்கு எதிராக முழக்கமிட்டனர். அப்போது ஜெயக்குமாரின் ஆதரவாளர்களும் எதிர் முழக்கமிட்டனர். முழக்கம் ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியது. ஜெயக்குமாரின் ஆதரவாளர் ஒருவர் ரத்தக் காயத்துடன் வெளியே வந்தார். தொடர்ந்து ஓபிஎஸ் - ஈபிஎஸ் என போட்டா போட்டி போட்டு முழக்கங்கள் ஓயாமல் ஒலித்துக் கொண்டிருக்கிறன.

இதையும் படிக்கலாம்: அதிமுக உட்கட்சி விவகாரம்: உயர்நீதிமன்றத்தில் புதிய மனு