தமிழ்நாடு

எம்.எல்.ஏ கூட்டத்துக்கு அழைப்பு விடுத்த அதிமுக, திமுக!

எம்.எல்.ஏ கூட்டத்துக்கு அழைப்பு விடுத்த அதிமுக, திமுக!

webteam

சட்டப்பேரவை நாளை கூட உள்ள நிலையில் அதிமுக, திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் தனித்தனியே இன்று மாலை நடைபெற உள்ளது. 

ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில், பேரவைக் கூட்டத்தொடரின் போது உறுப்பினர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. அதேபோல், தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் சட்டபேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. 

இந்த கூட்டத்தில் திமுக உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று சட்டபேரவை கொறடா சக்ரபாணி தெரிவித்துள்ளார். எந்தெந்த மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் யார், யார் பேச வேண்டும் என்பது குறித்து கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது.