தமிழ்நாடு

அகமதாபாத் டூ திருச்சி ரயிலுக்கு மயிலாடுதுறையில் உற்சாக வரவேற்பு – வட மாநிலத்தவர் கோரிக்கை

அகமதாபாத் டூ திருச்சி ரயிலுக்கு மயிலாடுதுறையில் உற்சாக வரவேற்பு – வட மாநிலத்தவர் கோரிக்கை

webteam

அகமதாபாத்தில் இருந்து திருச்சி வரை செல்லும் சிறப்பு ரயிலுக்கு மயிலாடுதுறையில் வட மாநிலத்தவர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தமிழகத்தில் உள்ள வட மாநிலத்தவர்கள் பயன்பெறும் வகையில் அகமதாபாத்தில் இருந்து திருச்சி வரை சிறப்பு தொடர்வண்டி (09419) சேவை தொடங்கப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு ஒருமாத காலத்திற்கு இந்த ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அகமதாபாத்தில் இருந்து புறப்பட்டு திருச்சி வரை செல்லும் சிறப்பு தொடர் வண்டிக்கு நள்ளிரவு மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் வட மாநிலத்தவர்கள் ஒன்றிணைந்து உற்சாக வரவேற்பு அளித்தனர். ரயிலுக்கு மாலை அணிவித்து சிறப்பு பூஜைகள் செய்து ஓட்டுநர், ரயில் நிலைய மேலாளர், காவல்துறை அதிகாரிகளுக்கு பொன்னாடை அணிவித்து இனிப்புகள் வழங்கினர்.

இதையடுத்து மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் வசிக்கும் வட மாநிலத்தவர்களின் நலன் கருதி இந்த வண்டியை தொடர் சேவையாக இயக்க வேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.