தமிழ்நாடு

விடுமுறைக் காலத்தில் விவசாய வேலைகளைக் கற்கக் களத்தில் இறங்கிய சிறுவர்கள்

PT


சீர்காழி அருகே கொரோனா ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கிய பிள்ளைகளுக்கு உழவு பணிகளைப் பயிற்றுவித்த விவசாய தம்பதிக்குப் பாராட்டுகள்
குவிந்து வருகின்றன.

 மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்தச் சென்னியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி நேதாஜி - விஜயலட்சுமி . இவர்களுக்கு தமிழ் அமுதன் மற்றும் பாரி அமுதன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். கொரோனா பரவல் காரணமாகப் பள்ளிகள் விடுமுறை விடப்பட்டதால், குழந்தைகளின் இந்த நேரத்தைச் சிறப்பாகப் பயன்படுத்த வேண்டும் என்று எண்ணிய இவர்களது பெற்றோர்கள், இருவருக்கும் விவசாயப்பணிகளைக் கற்றுக்கொடுக்க முடிவெடுத்தனர்.

அதன்படி தங்களுக்குச் சொந்தமான நிலத்திலேயே சம்பா சாகுபடியைத் துவங்கிய தம்பதிகள், தினமும் பிள்ளைகளை வயலுக்கு அழைத்துச் சென்று நாற்றுப் பட்டங்களை ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இழுத்துச் செல்வது, நாற்றுகளை அனைத்து பகுதிகளுக்கும் வீசுவது, நடவு பணிகள் உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் பயிற்றுவிக்கின்றனர். இரு குழந்தைகளும் விவசாயப் பணிகளை ஆர்வமுடன் செய்து வருகிறார்கள்.விவசாய தம்பதிகளின் இந்த முயற்சி சமூக வலைத்தளத்தில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.