தமிழ்நாடு

முதல்வர் முன்னிலையில் சாம்சங் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

Sinekadhara

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், புதிய திட்டத்திற்காக சாம்சங் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது.

சாம்சங் நிறுவனத்தின் 1,588கோடி ரூபாய் முதலீட்டில், காற்றழுத்த கருவிகள் உற்பத்தித் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் அமைக்கப்படவுள்ள இந்த திட்டத்தின் மூலமாக 600நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அரசு தெரிவித்துள்ளது. நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடப்பாண்டில், சாம்சங் நிறுவனம் ஆயிரத்து 800கோடி ரூபாய் அளவுக்கு தமிழகத்தில் முதலீடு செய்யவுள்ளதாகத் தெரிவித்தார்.

முதலீடுகள் அதிகரிப்பதன் மூலம் வேலைவாய்ப்புகள் பெருகி தொழில்துறை வளர்ச்சியடையும் என்றும், செமி கண்டக்டர் உற்பத்தியை தொடங்க அரசு தேவையான உதவிகளை வழங்கும் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.