குரூப்-1, குரூப்-2, குரூப்-4 தேர்வுகளுக்கான வயது வரம்பு 5 ஆண்டுகள் உயர்த்தப்பட்டுள்ளது. முதல்வர் விஜய் உத்தரவின் மூலம், பொதுப்பிரிவினருக்கு 37 வயது, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 42 வயது வரை சலுகை வழங்கப்பட்டுள்ளது.
அரசுப் பணிகளுக்கான நேரடி நியமன வயது வரம்பை 5 ஆண்டுகள் உயர்த்தி முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவின்படி, குரூப்-1 தேர்வெழுதும் பொதுப்பிரிவினருக்கு 37 வயதாகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 42 வயதாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோன்று குரூப்-2, குரூப்-4 தேர்வுகளுக்கான வயது வரம்பும் உயர்ந்துள்ள நிலையில், இந்தச் சலுகை 5 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.