தமிழ்நாடு

கேரளாவில் மீண்டும் கனமழை : நிரம்பும் முல்லைப்பெரியாறு

கேரளாவில் மீண்டும் கனமழை : நிரம்பும் முல்லைப்பெரியாறு

webteam

கேரளாவில் குமுளி, தேக்கடி போன்ற அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. 

முல்லைப்பெரியாறு அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகளான கேரளாவின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகள், அதனை ஒட்டியுள்ள குமுளி, தேக்கடி போன்ற பகுதிகளில் இரண்டு மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் குமுளி, தேக்கடியில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தேக்கடியில் குளிர்ச்சியான சூழல் நிலவியதால் சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்தனர். நீர்ப்பிடிப்பு பகுதிகளின் மழையால், கடந்த மூன்று நாட்களாக குறைந்திருந்த முல்லைப்பெரியாறு அணைக்கான நீர்வரத்து மீண்டும் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டிருப்பதாக தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.