தமிழ்நாடு

ஊரடங்கில் தளர்வு: கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் சூரியன் உதயமாவதை ரசித்த மக்கள்

ஊரடங்கில் தளர்வு: கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் சூரியன் உதயமாவதை ரசித்த மக்கள்

JustinDurai

ஊரடங்கு தளர்விற்குப்பின் கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் சூரியன் உதயமாவதை பார்க்க மக்கள் குவிந்தனர்.

மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ பாஸ் முறை ரத்து செய்யப்பட்டதால், சுற்றுலாத் தலங்களும் திறக்கப்பட்டுள்ளன. கன்னியாகுமரிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்த நிலையில், பகவதி அம்மன் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்தனர். சூரியன் உதயமாகும் காட்சியையும் ஏராளமானோர் பார்த்து ரசித்தனர். சுற்றுலாப் பயணிகளின் வருகை காரணமாக கடைகள் திறக்கப்பட்டதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.