தமிழ்நாடு

சென்னை புறநகர் ரயில்களில் இன்று முதல் பொதுமக்கள் பயணிக்க அனுமதி

சென்னை புறநகர் ரயில்களில் இன்று முதல் பொதுமக்கள் பயணிக்க அனுமதி

JustinDurai

சென்னையில் நீண்ட நாட்களுக்கு பிறகு புறநகர் ரயில்களில் பொதுமக்கள் பயணிக்கத் துவங்கினர்.

கொரோனா பொதுமுடக்கம் காரணமாக, சென்னை புறநகர் ரயில்களில் பயணிக்க முன்களப் பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே அனுமதி இருந்தது. இந்த நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் பொதுமக்களும் புறநகர் ரயில்களில் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே அறிவித்தது.

அதன்படி புறநகர் ரயில்களில் இன்று காலை முதல் பொதுமக்கள் பயணம் செய்கின்றனர். பெண்கள் மற்றும் 12 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் ரயில்களில் எந்த நேரத்திலும் பயணிக்கலாம். ஆண்கள் கூட்ட நெரிசல் அதிகம் இல்லாத நேரத்தில் மட்டும் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.