கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டு படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.
வானிலை மைய எச்சரிக்கையை அடுத்து, கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தபட்டு உள்ளது. இதனால் நாகர்கோயில், மணக்குடி, பள்ளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. இது போன்ற காலங்களில் அரசு நிவாரணம் தர வேண்டுமென மீனவர்கள் வலியுறுத்தி உள்ளனர். மாவட்டத்தில் அதிகபட்சமாக கொட்டாரத்தில் 40 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
அதேபோல், நாகை மாவட்டம் சீர்காழி அருகே கடல் சீற்றம் காரணமாக 26 கிராம மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. சீர்காழி, கொள்ளிடம், பூம்புகார், தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் 26 கிராமங்களை சேர்ந்த சுமார் 10 ஆயிரம் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. 750 விசைப் படகுகள் மற்றும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.