தமிழ்நாடு

‘கஜா’வை தொடர்ந்து மீண்டும் ஒரு தாழ்வு பகுதி

‘கஜா’வை தொடர்ந்து மீண்டும் ஒரு தாழ்வு பகுதி

webteam

‘கஜா’ புயலை தொடர்ந்து மீண்டும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வங்க கடலில் உருவான ‘கஜா’ புயல் பெ‌யருக்கு ஏற்றாற் போலவே யானை பலத்துடன் வந்து நாகை, தஞ்சை, திரு‌வாரூர் என தமிழகத்தின் பல மாவட்டங்களை புரட்டிப்போட்டுச் சென்றிருக்கிறது.‘கஜா’ புயல் ஏற்படுத்திய பாதிப்புகளில் இருந்து தமிழகம் இன்னும் மீண்டபாடுலில்லை.அதற்குள் மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

கடந்த சில நாட்களாக தமிழகத்தை மிரட்டி வந்த ‘கஜா’ புயல் நாகை-வேதாரண்யம் இடையே கரையை கடந்தது. அதன்பின் காற்றின் வேகம் மேலும் அதிகரித்து. வேதாரண்யம், நாகை, கடலூர் உள்ளிட்ட இடங்களில் 100 முதல் 130 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் சூறைக்காற்று வீசியது. பெரும்பாலான கடலோர பகுதிகளில் சூறைக்காற்றினால் ஏராளமான மரங்கள் சாய்ந்தன. மின்கம்பங்களும் புயல் காற்றினால் சேதமடைந்தன. கோரத் தாண்டவமாடிய ‘கஜா’ புயலால் அதிகம் பாதிப்புக்கு ஆளானது நாகை மாவட்டம் வேதாரண்யம் தான். இந்தப் புயலின் தாக்கத்தால், வேதாரண்யம் தனித் தீவாகவே மாறியுள்ளது. ‘கஜா’ புயலால் சாய்ந்த மின் கம்பங்கள் மற்றும் மரங்களை அகற்றும் பணி அதிதீவரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கஜா புயல் பகல் 12 மணியளவில் வலு குறைந்து தாழ்வு மண்டலமாக மாறியது. இதனைதொடர்ந்து ‘கஜா’ புயல் மதியம் 3 மணியளவில் கேரளாவுக்கு நகர்ந்து சென்றதுள்ளது.

மேலும் பேசிய அவர், தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் வருகிற 18-ந்தேதி (நாளை) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றார். இந்த தாழ்வு பகுதி 19, 20 ஆகிய தேதிகளில் மேற்கு,வடமேற்கு திசையில் நகர்ந்து தென் மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவக்கூடும் என்றார். பின் ‘கஜா’ புயல் தமிழகத்தை கடந்ததையடுத்து, மீனவர்கள் கடலுக்குள் செல்லலாம். 18ஆம் தேதி மத்திய தெற்கு வங்ககடல் பகுதியிலும், 19ஆம் தேதி தென் மேற்கு வங்ககடல் பகுதிகளிலும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார். கேரளாவில் ‘கஜா’ புயல் தாக்கத்தால் சில இடங்களில் மழை பெய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.