தமிழ்நாடு

காவல்துறையினருடன் வாக்கு வாதம் செய்த வழக்கறிஞருக்கு முன்ஜாமீன் மறுப்பு

webteam

சென்னையில் காவல்துறையினரிடம் வாக்குவாதம் செய்த பெண் வழக்கறிஞர் தனுஜா ராஜனின் முன்ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

வழக்கறிஞர் தனுஜா ராஜன் முன் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தான் பேசியதை எடிட் செய்து தங்களுக்கு சாதகமான வீடியோவை காவல்துறை வெளியிட்டுள்ளது என்றும் தனது மகள் மருந்து வாங்கவே சென்றார் எனவும் தனுஜா ராஜன் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்ததுடன், கொலை மிரட்டலும் விடுத்துள்ளதால் முன் ஜாமீன் வழங்கக் கூடாது என காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. இதனைக் கேட்ட நீதிபதி செல்வகுமார், இது போன்ற சம்பவத்தில் முன் ஜாமீன் வழங்கினால் தவறான முன் உதாரணமாகிவிடும் என்றும் பெண் வழக்கறிஞரின் செயல்பாடு சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் தெரித்தார். இதையடுத்து வழக்கறிஞர் தனுஜா ராஜன் மற்றும் அவரது மகளின் முன் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.