எடப்பாடி பழனிசாமி pt desk
தமிழ்நாடு

தொகுதி மறுவரையறை அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும் - எடப்பாடி பழனிசாமி

தொகுதி மறுவரையறை தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்..

PT WEB

செய்தியாளர்: S.மோகன்ராஜ்

தொகுதி மறுவரை தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும்:

சேலத்தில் அதிமுக சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்ற இந்த முகாவை தொடங்கி வைத்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்... தொகுதி மறுவரை தொடர்பாக வரும் 5 ஆம் தேதி நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக சார்பில் இரண்டு பேர் பங்கேற்பார்கள். அதிமுகவின் நிலைப்பாட்டை அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தெரிவிப்போம்.

சட்டமன்றத்தில் அதிமுக பிரதான எதிர்க்கட்சி:

ஆளுகின்ற கட்சியைத் தவிர அனைத்துக் கட்சிகளும் எதிர்க்கட்சிகள்தான், சட்டமன்றத்தில் அதிமுகதான் பிரதான எதிர்க்கட்சி;. சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக மக்கள் அதிமுகவை அங்கீகரித்துள்ளனர் தமிழகத்தில் போதைப் பொருட்கள், கள்ள்ச்சாராய விற்பனையை தடுக்க வேண்டும். அதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும், அரசு கண்டு கொள்வதில்லை என்பதால்தான் மீண்டும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டினார்.

சீமான் வீட்டின் முன்பு என்ன நடந்தது என்று முழுமையாக தெரியாது:

வேலியே பயிரை மேய்ந்த கதையாக பள்ளிகளில் ஒரு சில ஆசிரியர்கள் செய்வது வேதனையளிக்கிறது. பாலியல் கொடுமைகளை தடுக்க அரசு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சீமான் வீட்டின் முன்பு என்ன நடந்தது என்று முழுமையாக தெரியாது என்று கூறிய அவர், காவல்துறையினர் பாரபட்சமில்லாமல் நடந்துகொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.