கட்சித் தலைமை அங்கீகரிக்காதவர்களிடம் அதிமுகவின் கருத்தை கேட்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என ஊடகங்களுக்கு அதிமுக எச்சரிக்கை விடுத்துள்ளது.
அடுத்த அறிவிப்பு வரும் வரை எந்த ஊடகத்திலும் பத்திரிகையிலும் அதிமுக செய்தி தொடர்பாளர்கள் கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று அதிமுக நேற்று தெரிவித்திருந்தது. இந்நிலையில் கட்சித் தலைமை அங்கீகரிக்காதவர்களிடம் அதிமுகவின் கருத்தை கேட்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என ஊடகங்களுக்கு அதிமுக எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில், “ அதிமுகவின் பிரதிநிதிகள் என்றோ, அதிமுகவின் பெயரை வேறு எந்த வகையிலோ பிரதிபலிக்கும் யாரையும் ஊடக வழியாக கருத்துகளை தெரிவிக்க அழைக்கவோ, அனுமதிக்கவோ வேண்டாம். அவ்வாறு மீறும்பட்சத்தில் அந்த நபர்கள் கொடுக்கும் பேட்டிகளுக்கும் செய்திகளுக்கும் அதிமுக எந்த வகையிலும் பொறுப்பேற்காது. இதுசம்பந்தமாக சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு எங்களை ஆட்படுத்தமாட்டீர்கள் என நம்புகின்றோம்” என தெரிவித்துள்ளது.