தமிழ்நாடு

சசிகலா தேர்வு: அதிமுகவினர் கொண்டாட்டம்

சசிகலா தேர்வு: அதிமுகவினர் கொண்டாட்டம்

webteam

அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதை அடுத்து அதிமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

சட்டமன்றக் குழுத் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்ட செய்தி அறிந்தவுடன் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர். தமிழகத்தின் முதலமைச்சராக சசிகலா பதவியேற்கவிருக்கிறார் என்ற செய்தி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.