ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியைச் சந்திக்க அதிமுக எம்பிக்க நேரம் கேட்டுள்ளனர்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையின் ஒருபகுதியாக நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படவில்லை. இந்தாண்டு பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் வலுத்து வருகிறது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி அதிமுக எம்பிக்கள் பிரதமர் மோடியிடம் நேரில் கோரிக்கை மனு அளிக்க உள்ளனர். இதற்காக மோடியை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு பிரதமர் அலுவலகத்திடம் கேட்டுள்ளனர்.