தமிழ்நாடு

இன்று பதவியேற்பு?: கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக்கள் அவசர ஆலோசனை

இன்று பதவியேற்பு?: கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக்கள் அவசர ஆலோசனை

webteam

கூவத்தூர் தனியார் விடுதியில் அதிமுக எம்எல்ஏக்கள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

அதிமுகவின் சட்டமன்ற கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி, ஆளுநரின் அழைப்பை ஏற்று அவரை மதியம் 12.30 மணிக்கு சந்திக்க இருக்கிறார். இதற்காக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் அதிமுக அவைத்தலைவர் செங்கோட்டையன் ஆகியோர் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்திக்க கூவத்தூரில் இருந்து புறப்பட்டனர். இந்த நிலையில், அதிமுக எம்பி தம்பிதுரை தலைமையில் எம்எல்ஏக்கள் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இன்று மாலையே பதவியேற்வு விழா நடக்க வாய்ப்பிருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் கூறப்படுகிறது.