தமிழ்நாடு

செப்.5 ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

செப்.5 ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

rajakannan

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வருகின்ற செப்டம்பர் 5 ஆம் தேதி கூட உள்ளது. இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறும் என கூறப்படுகிறது.

சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரி திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சமீபத்தில் நேரில் சந்தித்து வலியுத்தி இருந்தனர். இந்த நிலையில், செப்.5 ஆம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் வருகின்ற செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்திற்கு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, செப்டம்பர் 5 ஆம் தேதி முரசொலி பவளவிழா கூட்டம் நடைபெறவுள்ளது.