தமிழ்நாடு

ஜெயலலிதா கூறியதால் ஜூனியரான பன்னீர்செல்வத்தை ஏற்றோம்: செம்மலை

ஜெயலலிதா கூறியதால் ஜூனியரான பன்னீர்செல்வத்தை ஏற்றோம்: செம்மலை

webteam

ஜெயலலிதா கூறியதாலேயே ஜூனியரான பன்னீர்செல்வத்தை ஏற்றதாக அதிமுக எம்எல்ஏ செம்மலை தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய செம்மலை, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் அரசியல் பயின்றவர் சசிகலா என்று தெரிவித்தார். ஜெயலலிதா கூறியதாலேயே ஜூனியரான ஓ.பன்னீர்செல்வத்தை ஏற்றதாகக் கூறிய செம்மலை, சீனியர்களிடம் இருக்கும் பொறுமை பன்னீர்செல்வத்திடம் இல்லை என்றும் தெரிவித்தார். எதிர்கட்சியினர் பன்னீர்செல்வத்தை கருவியாக வைத்து இயக்குவதாகவும் செம்மலை குற்றம்சாட்டினார். அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு எதிராகப் போர்க்கொடி துக்கிய முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்தசூழலில் அதிமுகவின் எம்எல்ஏக்கள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடக்கிறது.