தமிழ்நாடு

சட்டப்பேரவை ஆய்வுக்குழு கூட்டம் - அதிருப்தியை வெளிப்படுத்திய அதிமுக எம்.எல்.ஏ 

சட்டப்பேரவை ஆய்வுக்குழு கூட்டம் - அதிருப்தியை வெளிப்படுத்திய அதிமுக எம்.எல்.ஏ 

webteam

அரியலூரில் நடைபெற்ற சட்டப்பேரவை ஆய்வுக்குழு கூட்டத்திற்கு தன்னை முறையாக அழைக்கவில்லை என்று அதிமுக எம்எல்ஏ குற்றச்சாட்டினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை மனுக்கள் குழுவினரின் ஆய்வுக்கூட்டம், அரியலூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற்றது. குழுவின் தலைவர் தாமரை ராஜேந்திரன் தலைமையில் தொடங்கிய இந்தக் கூட்டத்துக்கு வந்த, குன்னம் அதிமுக எம்எல்ஏ ராமச்சந்திரன் தனக்கு முறையான அழைப்பு விடுக்கப்படவில்லை என்று புகார் எழுப்பினார். 

தான் கூட்டத்தில் கலந்து கொள்ளலாமா ? வேண்டாமா ? என கேள்வி எழுப்பிய ராமச்சந்திரன், வேண்டாம் என்றால் கூட்டத்தை விட்டு வெளியேற தயாராக இருப்பதாகவும் அதிருப்தியை வெளிப்படுத்தினா‌ர். இதையடுத்து, குழுத் தலைவர் தாமரை ராஜேந்திரன், எம்எல்ஏ ராமச்சந்திரனை சமாதானப்படுத்தினார். அதன்பிறகு ஆய்வுக் கூட்டம் தொடங்கியது.