தமிழ்நாடு

“நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் விஜயகாந்த் போல நிலைக்க முடியாது” - அமைச்சர் பாஸ்கரன்

“நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் விஜயகாந்த் போல நிலைக்க முடியாது” - அமைச்சர் பாஸ்கரன்

webteam

இனி வரும் காலங்களில் நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் விஜயகாந்தை போல நிலைத்து நிற்க முடியாது என கதர் கிராமத் தொழில்கள் நல வாரிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சிவகங்கையில் கால்நடைகளுக்கான ஆம்புலன்ஸ் வாகன தொடக்க விழாவிற்கு அமைச்சர்க் பாஸ்கரன் வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், சிவகங்கை மாவட்டத்தை பிரித்து புதிய மாவட்டம் உருவாக்கும் திட்டம் அரசிடம் உள்ளதா ? என கேள்வி எழுப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “சிவகங்கை மாவட்டத்தை இரண்டாக பிரிக்கும் எண்ணம் அரசிற்கு இல்லை” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “இனி வரும் காலங்களில் நடிகர்கள் அரசியலுக்கு வந்தால் விஜயகாந்தை போல நிலைத்து நிற்க முடியாது” என்று கூறினார். உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் தேமுதிக இருப்பது குறிப்பிடத்தக்கது.