அதிமுகவின் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டத்தில் மத்திய அரசின் தலையீடு ஏதும் இருப்பதாக தெரியவில்லை என அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
மூத்த அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் டிடிவி தினகரன் இன்று ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், புத்தாண்டை ஒட்டி நிர்வாகிகள் தம்மை சந்தித்ததாக கூறினார். அமைச்சர் விஜயபாஸ்கர் மீது எந்த குற்றமும் இல்லை என கூறிய தினகரன், எந்தத்துறை சோதனை நடத்தினாலும் எந்தத் தவறையும் கண்டுபிடிக்கமுடியாது என தெரிவித்தார். இரட்டை இலை சின்னத்தை முடக்கியதில் மத்திய அரசின் பங்கு எதுவும் இருப்பதாக தெரியவில்லை என தினகரன் குறிப்பிட்டார்.