OPS EPS pt desk
தமிழ்நாடு

"ஒற்றை தலைமையின் கீழ் அதிமுக ஒரு தேர்தலில் கூட வெற்றி பெறவில்லை" - இபிஎஸ் மீது ஓபிஎஸ் சாடல்

ஒற்றை தலைமையின் கீழ் ஒரு தேர்தலில் கூட வெற்றி பெறாத எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து தானாக விலகிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், அவமரியாதையை சந்திப்பார் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

PT WEB

செய்தியாளர்: சுரேஷ்குமார்

அதிமுக தலைமை அலுவலகத்தை நாங்கள் சேதப்படுத்தவில்லை:

சென்னை விமான நிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் கட்சி தலைமை அலுவலகத்தை சேதப்படுத்திய உங்களை அதிமுகவில் இணைக்க முடியாது, என்ற எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளாரே என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ், ”கட்சி தலைமை அலுவலகத்தை நாங்கள் சேதப்படுத்தவில்லை.

OPS EPS

அடியாட்களை வைத்து அலுவலகத்தை சேதப்படுத்தியது அவர்கள் தான்:

தவறான பொதுக் குழுவை கூட்டினார்கள். அதனால் கட்சி தலைமை அலுவலகத்துக்கு புறப்பட்டு வந்தோம். ஆனால், கட்சி அலுவலகத்துக்கு ஒரு கிலோ மீட்டருக்கு முன்பாகவே தடுத்து நிறுத்தப்பட்டோம். நாங்கள் வந்த வாகனத்தை தாக்கினார்கள். எங்களை தாக்கிய அவர்கள் தாங்களாகவே சென்று அடியாட்களை வைத்து கட்சி தலைமை அலுவலகத்தை சேதப்படுத்தினார்கள். இது அனைத்தும் காவல்துறை பதிவில் இருக்கிறது.

அதிமுக வெற்றி பெறக் கூடாது என்ற நோக்கில் எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார்:

அதிமுகவில் இணைய வேண்டும் என்று நான் கேட்கவில்லை. அதிமுகவின் சக்திகள் இணைய வேண்டும் என்று தான் வலியுத்துகிறோம். அப்பொழுதுதான் வெற்றி பெறும் சூழல் உருவாகும். அதிமுக வெற்றி பெறக் கூடாது என்ற நோக்கில் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார். அதிமுக வெற்றி பெறும் வாய்ப்பு எந்த காலத்திலும் இருக்கக் கூடாது என்று எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார்.

எடப்பாடி பழனிசாமி

பொதுச் செயலாளர் பதவியில் இருந்து இபிஎஸ் தானாக விலகிக் கொள்ள வேண்டும்:

ஒற்றை தலைமை வந்தால் எல்லா தேர்தலிலும் வெற்றி பெறுவேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். ஆனால், ஒரு தேர்தலில் கூட அவர் வெற்றி பெறவில்லை. எடப்பாடி பழனிசாமி அவராகவே பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் எடப்பாடி பழனிசாமி அவமரியாதையை சந்திப்பார். என்று ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமிக்கு காட்டமாக பதிலளித்தார்.