தமிழக மக்களின் எண்ணங்களை நிறைவேற்றவே அதிமுக அரசு திட்டமிட்டு செயலாற்றி வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்ற வலையர் வாழ்வுரிமை மாநாட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், விஜயபாஸ்கர், வளர்மதி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக அரசில் விவசாயிகள், பெண்கள், ஏழைகள் என பல்வேறு தரப்பினரின் நலனுக்காக நிறைவேற்றப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களைப் பட்டியலிட்டார். மக்கள் அனைவருக்கும் வீடு, சுகாதார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைத்திட வேண்டும் என்பதே அதிமுக அரசின் நோக்கம் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.