தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதில்லை எனவும், ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு ஏதுவாக அவசரச் சட்டம் கொண்டு வரக் கோரியும் பிரதமருக்கு அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவில்லை. எனவே இந்தாண்டாவது பொங்கலின் போது ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு ஏதுவாக அவசரச் சட்டம் கொண்டு வரக் கோரி பிரதமருக்கு அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டில், காளைகள் துன்புறுத்தப்படுவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தமிழகத்தில் பொங்கலின் போது ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு ஏதுவாக அவசரச் சட்டம் கொண்டு வரக் கோரி மத்திய அமைச்சரிடம் அதிமுக எம்.பி.க்கள் இன்று டெல்லியில் நேரில் வலியுறுத்தினர்.