செங்கோட்டையன், மோடி எக்ஸ்
தமிழ்நாடு

”இந்தியா மற்ற நாடுகளுக்கு வாழிகாட்டியாக உள்ளது” - மத்திய அரசுக்கு செங்கோட்டையன் புகழாரம்!

மத்திய அரசு எடுக்கிற பல்வேறு நடவடிக்கைகள் இந்தியாவுக்கு பாதுகாப்பு அரணாக உள்ளது எனவும் இந்திய தேசம் உலகத்துக்கு வழிகாட்டியாக விளக்குகிறது எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் மத்திய அரசுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

PT WEB

நாடு முழுவதும் 79வது தேசிய சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. பவானிசாகர் சட்டமன்ற அதிமுக உறுப்பினர் பண்ணாரி அலுவலகத்தில் தேசிய கொடியேற்றி வைத்து முன்னாள் அதிமுக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கட்சித் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மத்திய அரசை புகழ்ந்து பேசினார்.

அவர் பேசியது:-

இந்திய தேசம் என்பது உலகத்துக்கு வழிகாட்டியாக மதம் மொழிக்கு அப்பாற்பட்டு அனைவரையும் ஒருங்கிணைந்து மற்ற நாடுகளுக்கு வழிகாட்டியாக விளக்குகிறது. இந்திய திருநாட்டில் வாழும் ஒவ்வொரு குடிமகனுக்கும் முழுமையான பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. தனிமனிதன் சுதந்திரம் பேணி காக்கப்படுகிறது.

எல்லையோரங்களை இந்தியா பேணி காத்து அமைதி உருவாகிற நிலையை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. மத்திய அரசு எடுக்கிற பல்வேறு நடவடிக்கைகள் இந்தியாவுக்கு பாதுகாப்பு அரணாக உள்ளது. அனைத்து மதத்தினரையும் ஒருங்கிணைத்து ஒற்றுமை உணர்வோடு வாழவைக்கும் சிறந்த ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்திய தேசமானது உலகத்தில் அதிக மக்கள் தொகை உள்ள நாடாக உள்ளது. கொரானா தொற்று ஏற்பட்ட காலத்தில் எல்லோரும் வியந்து பாராட்டும் அளவுக்கு எல்லோருக்கும் உயிர்க்காக்கும் உதவிகளை மத்திய அரசு செய்திருக்கிறது. தேசம் வலிமையோடு இருப்பதற்கும், மக்கள் சுதந்திரத்தை சிறந்த முறையில் பேணி காக்கும் வகையிலும், தொழில் கல்வி வேலை வாய்ப்பு ஒருங்கிணைந்து செயல்படும் நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்” என மத்திய அரசை அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புகழ்ந்து பேசினார்.

பேட்டியின் போது பவானிசாகர் அதிமுக எம்எல்ஏ பண்ணாரி உடனிருந்தார்.